மேலும் செய்திகள்
எஸ்.என்.எஸ்., பாராமெடிக்கல் வகுப்புகள் துவக்கம்
05-Nov-2024
கோவை; கடந்த 1994ம் ஆண்டு நவ., 7ம் தேதி நிறுவப்பட்ட, பி.எஸ்.ஜி., செவிலியர் கல்லுாரியின் நிறுவன தின விழா, பி.எஸ்.ஜி., மருத்துவ அறிவியல் மற்றும் ஆராயச்சி நிறுவன கலையரங்கத்தில் நடந்தது. பி.எஸ்.ஜி., சன்ஸ் மற்றும் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு, சிறப்புரையாற்றினர்.விழாவில், அயர்லாந்து கொலம்சில்லே மருத்துவமனையில் பணிபுரியும் முன்னாள் மாணவர் கிளமென்ட் மற்றும் சேலம் எஸ்.கே.எஸ்., நர்சிங் கல்லுாரி முதல்வர் செல்வராஜ், அயர்லாந்து கார்க் யூனிவர்சிட்டி மருத்துவமனையின் தலைமை செவிலியர் விஜயலட்சுமி ஆகிய முன்னாள் மாணவர்கள் விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.டெல்லி, செவிலியர் கூட்டமைப்பு சங்க தேசிய தலைவர் டாக்டர் ராய் ஜார்ஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முன்னாள் மாணவர்களை கவுரவித்தார். கல்லுாரியின் முதல்வர் மீரா மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
05-Nov-2024