குமரி அனந்தனுக்கு காங்., அஞ்சலி
பொள்ளாச்சி, ; மூத்த காங்., தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு கோவை தெற்கு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.மூத்த காங்., தலைவர் குமரி அனந்தன் கடந்த சில நாட்களுக்கு முன் இறந்தார். அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.பொள்ளாச்சி காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் பகவதி தலைமை வகித்தார். தொடர்ந்து, குமரிஅனந்தன், திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்கள் துாவியும் மரியாதை செலுத்தப்பட்டது.நகரத்தலைவர் செந்தில்குமார், மாவட்ட துணைத்தலைவர்கள் பத்ரகிரி, மோகன்ராஜ், மாவட்ட மனித உரிமை தலைவர் பஞ்சலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.