மேலும் செய்திகள்
ரயிலில் கஞ்சா கடத்தல்
08-Aug-2025
கோவை; கோவை அருகே மலுமிச்சம்பட்டி பிரிவு பகுதியில், விற்பனைக்காக கஞ்சா கொண்டு செல்வதாக, பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சோதனை செய்தபோது, சந்தீப் குமார் பெஹ்ரா,22, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து, 6 கிலோ, 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதேபோல், பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த, மேற்குவங்கத்தைச் சேர்ந்த மதியார் ரகுமான் மொல்லா,26 என்பவரை கைது செய்து, 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
08-Aug-2025