உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போதையில் ரகளையில் ஈடுபட்ட இருவர் கைது

போதையில் ரகளையில் ஈடுபட்ட இருவர் கைது

வால்பாறை; கேரள மாநிலம் பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்தவர் சரத், 27. இவர் மீது வால்பாறை அடுத்துள்ள முடீஸ் போலீஸ் ஸ்டேஷனில் நிலுவையில் உள்ள வழக்கில் ஆஜராக, வால்பாறை கோர்ட்க்கு நேற்று முன்தினம் வந்தார்.இவரது நண்பர், வால்பாறை காமராஜ்நகரை சேர்ந்தவர் தாஸ்,53. இவர் மீது கஞ்சா விற்பனை செய்த வழக்குகள் உள்ளன. இவர்கள் இருவரும், மார்க்கெட் பகுதியில் மது அருந்தியுள்ளனர்.அப்போது, திடீரென்று ஆவேசமடைந்த சரத், தாஸ்சை கல்லால் தாக்கியதில் படுகாயம் அடைந்தார். தப்பி ஓடிய சரத்தை, தாஸ்சின் இரண்டு மகள்கள் விரட்டி சென்று, நகராட்சி பயணியர் நிழற்கூரை அருகே பிடித்தனர். அங்கு வந்த தாஸ், கையில் வைத்திருந்த பிளேடால், சரத்தின் தலை மற்றும் முகத்தில் கீறியதில் அவர் படுகாயமடைந்தார். இருவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இந்த சம்பவம் குறித்து, வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாஸ், சரத் இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை