உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சட்டவிரோதமாக மது விற்ற இருவர் கைது

சட்டவிரோதமாக மது விற்ற இருவர் கைது

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு சுற்றுவட்டாரத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். கிணத்துக்கடவு சுற்றுவட்டாரத்தில் மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கிணத்துக்கடவு ஆர்.எஸ். ரோடு டாஸ்மாக் மதுக்கடை அருகே ராமநாதபுரத்தை சேர்ந்த கார்மேகம், 55, என்பவரிடமிருந்து, 10 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதே போன்று, சிக்கலாம்பாளையம் மயானம் அருகே, அதே பகுதியை சேர்ந்த குமார், 38, என்பவரிடமிருந்து, 16 மது பாட்டில்கள் என மொத்தம், 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி