மேலும் செய்திகள்
கள்ள சந்தையில் மது விற்றவர் கைது
24-Aug-2025
கோவை; குனியமுத்துார், புட்டு விக்கி ரோட்டில் உள்ள 'டாஸ்மாக்' பாரில் மது விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் சோதனையில், ராமநாதபுரம் மாவட்டம் நிலமலை மங்கலத்தைச் சேர்ந்த காளிதாஸ், 36 என்பவர் மது விற்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 33 மதுபாட்டில்கள், ரூ.4,280ஐ பறிமுதல் செய்தனர். செல்வபுரம் டாஸ்மாக் பாரில் மது விற்ற திருச்சி மருங்காபுரியை சேர்ந்த சங்கர், 36 என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 34 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
24-Aug-2025