மேலும் செய்திகள்
லாட்டரி விற்ற 3 பேர் கைது
17-May-2025
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் எஸ்.ஐ., நமச்சிவாயம் மற்றும் போலீசார் கோவை மேட்டுப்பாளையம் ரோடு, கேஸ் கம்பெனி பஸ் நிறுத்தம்அருகே ரோந்து சென்ற போது, மோகன்குமார், 29, சதீஷ்குமார்,26, கிறிஸ்டோபர், 24, ஆகியோர் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் சதீஷ்குமார், கிறிஸ்டோபர் இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 300 போதை மாத்திரை, 150 கிராம் எடையுள்ள கஞ்சா, இருசக்கர வாகனம் மற்றும், 3 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தப்பி ஓடிய மோகன்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.
17-May-2025