உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளியில் திருட்டு; இருவர் கைது

பள்ளியில் திருட்டு; இருவர் கைது

மடத்துக்குளம்; மடத்துக்குளம் அருகே, அரசுப்பள்ளியில் லேப்டாப், டிவி திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மடத்துக்குளம், கொழுமம் குப்பம்பாளையம் துவக்கப்பள்ளிக்குள் கடந்த, 20ம் தேதி, இரவு புகுந்த திருடர்கள், பீரோவிலிருந்த இரண்டு லேப்-டாப் மற்றும் டி.வி.,யை திருடிச்சென்றனர். இது குறித்து குமரலிங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குப்பம்பாளையம் குமரன் வீதியை சேர்ந்த அன்பரசன்,23, கணேசன், 21, ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து திருடு போன பொருட்களை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை