உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கார் மீது பைக் மோதி இருவர் காயம்

கார் மீது பைக் மோதி இருவர் காயம்

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில், கார் மீது பைக் மோதியதில், இளைஞர்கள் இருவர் படுகாயம் அடைந்தனர்.மேட்டுப்பாளையம் சத்ய சாய் நகரைச் சேர்ந்தவர்கள் ஹரிஷ், 18; இவரது நண்பர் சஞ்ஜித், 19. இருவரும் மோட்டார் சைக்கிளில், மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் சாலையில் வந்து கொண்டிருந்தனர். ஜடையம்பாளையம் பிரிவு அருகே வரும்போது, சாலையின் ஓரத்தில் நின்று இருந்த ஆம்னி கார், மற்றொரு புரம் செல்ல சாலையை கடக்க முயன்றது. அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள், ஆம்னி கார் மீது மோதி விபத்துக்கு உள்ளாகினர்.இதில் ஹரிஷ், சஞ்ஜித் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவைக்கு சஞ்ஜித் மாற்றப்பட்டார். இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ