பெண்ணுக்கு மிரட்டல் இருவர் சிறையிலடைப்பு
கோவை: ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் ரோட்டை சேர்ந்த 32 வயது பெண், அழகு நிலையம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது மகளுடன் வாலிபர் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். அதைப்பார்த்த அப்பெண், வாலிபர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் அவருடன் பேசுவதை நிறுத்துமாறு எச்சரித்தார். நேற்று முன்தினம் பணிமுடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு அந்த வாலிபர் தனது நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். பெண்ணை பார்த்ததும், அவர் அருகில் சென்று தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். பெண், ராமநாதபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், முகேஸ், 22, அபிஷேக், 23 ஆகிய இருவரை, சிறையில் அடைத்தனர்.