உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புற்றுநோய் முகாமில் இருவருக்கு அறிகுறி

புற்றுநோய் முகாமில் இருவருக்கு அறிகுறி

அன்னுார்; அன்னுார் வட்டாரத்தில், புற்றுநோய் கண்டறியும் பரிசோதனையில் இருவர் கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.தமிழக அரசு சுகாதாரத்துறை சார்பில், பொகலூர், மூக்கனூர், செம்மாணிசெட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அக்கரை செங்கப்பள்ளி, கணுவக்கரை உள்ளிட்ட மூன்று துணை சுகாதார நிலையங்களிலும் புற்றுநோய்க்கான ஆரம்ப நிலை பரிசோதனை நடைபெற்றது.இதில் இருவருக்கு அறிகுறிகள் தென்பட்டதால், அடுத்த கட்ட பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.தொடர்ந்து மூக்கனுார், பொகலுார், செம்மாணி செட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு புற்றுநோய் பரிசோதனை நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை