சிறை வளாகத்தில் மோதிய போலீசார் இருவர் சஸ்பெண்ட்
கோவை: கோவை சிறை வளாகத்தில் மோதலில் ஈடுபட்ட இரண்டு போலீசாரை, சிறை எஸ்.பி., சஸ்பெண்ட் செய்தார்.கோவை மத்திய சிறையில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர்கள் பிரசாத், 37 மற்றும் ரியாஸ்கான், 32. கடந்த 16ம் தேதி, கைதி ஒருவருக்கு உடல் நிலை சரியில்லாததால், அவரை பிரசாத் ஆம்புலன்சில், கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்.இந்நிலையில், மருத்துவமனையில் இருந்த பிரசாத்தை, சிறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து அழைத்து உடனே சிறைக்கு வருமாறு கூறினர். அப்போது, பிரசாத் தனக்கு பணி நேரம் முடிந்து விட்டதால், ஆம்புலன்சை மாற்று டிரைவர் ரியாஸ்கானிடம் கொடுத்து விடுவதாக கூறினார்.ரியாஸ்கானிடம் போனில் தகவல் தெரிவித்தார். ரியாஸ்கான் வர மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.ஆத்திரம் அடைந்த பிரசாத், மத்தியசிறைக்குசென்றுகேன்டீனில்அமர்ந்திருந்தார்.அப்போது அங்கு ரியாஸ்கான் வர, மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.வாக்குவாதம் முற்றிய நிலையில், ரியாஸ்கான் அருகில் இருந்த இரும்பு ராடால், பிரசாத்தை தாக்கினார். பிரசாத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் பிரசாத்தை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார், ரியாஸ்கான் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.இந்நிலையில், சிறை வளாகத்தில் கட்டுப்பாட்டை மீறி, மோதலில் ஈடுபட்ட இருவரையும், சிறை எஸ்.பி., செந்தில்குமார் 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.