உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆட்டோ டிரைவரை வெட்டிய இருவருக்கு தலா 2 ஆண்டு சிறை

ஆட்டோ டிரைவரை வெட்டிய இருவருக்கு தலா 2 ஆண்டு சிறை

கோவை; கோவை, புலியகுளம், கந்தசாமி வீதியை சேர்ந்த அபிலாஷ், அதே பகுதியில் கடைக்கு சென்ற பெண்களை கேலி செய்தார். இதை ஆட்டோ டிரைவர் மாரிமுத்து கண்டித்ததால், அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. 2014, மே 11ல், அபிலாஷ்,34, இவரது நண்பர் காந்திமாநகரை சேர்ந்த மணிகண்டன்,30, ஆகியோர் மாரிமுத்துவை அரிவாளால் வெட்டினர். படுகாயமடைந்த மாரிமுத்துவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் போலீசார் விசாரித்து, அபிலாஷ், மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர். இருவர் மீதும், கோவை முதலாவது கூடுதல் சார்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி செந்தில்குமார், இருவருக்கும் தலா இரண்டாண்டு சிறை தண்டனை விதித்து, நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ