உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இளைஞர் கொலையில் இருவர் சரண்

இளைஞர் கொலையில் இருவர் சரண்

சூலுார்:கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் குத்திக் கொல்லப்பட்டார். கோவை மாவட்டம், சூலுாரில் உள்ள பெட்ரோல் பங்க்கில், சித்தநாயக்கன் பாளையத்தை சேர்ந்த சந்தோஷ், 30, என்பவர் கேஷியராக வேலை செய்தார். திருமணமாகி குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தபோது, பைக்கில் வந்த இருவர், சந்தோஷை கத்தியால் கழுத்தில் சரமாரியாக குத்தி தப்பினர். அதில், அவர் உயிரிழந்தார். கொலையில் ஈடுபட்ட இருவர், சூலுார் போலீசில் சரணடைந்தனர். விசாரணையில், அவர்கள், கண்ணம்பாளையம் அம்மன் நகரை சேர்ந்த ரவிச்சந்திரன், 29, அவரது நண்பர் நவீன் குமார், 25, என தெரிந்தது. கொலைக்கு கள்ளத்தொடர்பே காரணம் என்றும் தெரிய வந்துள்ளது. இக்கொலையில் மேலும் சிலருக்கு தொடர்புள்ளதும் தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ