உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருதமலையில் டூவீலர் செல்ல அனுமதி வேண்டும்

மருதமலையில் டூவீலர் செல்ல அனுமதி வேண்டும்

வடவள்ளி, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினசரி அதிகாலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். காலையில் வேலைக்கு செல்லும் பக்தர்கள் அதிகாலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். தினமும் பக்தர்கள் கோயில் பஸ்களில் மலைக்கு மேல் செல்கின்றனர். இருக்கர வாகனங்களில் செல்வோருக்கு காலை 7 மணி மேல் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால் அதிகாலையில் கோயில் செல்லும் பக்தர்கள் அவதிபடுகின்றனர். எனவே காலை நேரங்களிலும் இரு சக்கர வாகனத்தில் செல்வோருக்கு அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். – முருகேசன், கவுண்டம்பாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி