உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திருமணம் செய்வதாக ஆசை காட்டி இரு பெண்கள் பாலியல் பலாத்காரம்; வாலிபர்கள் இருவர் மீது வழக்கு

திருமணம் செய்வதாக ஆசை காட்டி இரு பெண்கள் பாலியல் பலாத்காரம்; வாலிபர்கள் இருவர் மீது வழக்கு

கோவை; திருமண ஆசை காட்டி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த இரு வாலிபர்கள் மீது, போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.கோவை, கே.கே.புதுாரை சேர்ந்தவர், 29 வயது இளம்பெண்; ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, தன்னுடன் பள்ளியில் படித்த இடையர்பாளையத்தை சேர்ந்த ஜெய்லாபுதீன் என்பவருடன் காதல் ஏற்பட்டது. ஜெய்லாபுதீன், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி புதுச்சேரி, கொச்சின் என அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின் பழகுவதை தவிர்த்தார்.இது குறித்து கேட்டபோது, ஜெய்லாபுதீன் திருமணம் செய்ய மறுத்து, தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளார். அந்த பெண், மத்திய மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஜெய்லாபுதீன், 30, மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

மேட்ரிமோனி காதல்

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர், 30 வயது பெண். இவர் மேட்ரி மோனியில் வரன் தேடி வந்தார். அப்போது அவருக்கு அதே மாநிலத்தை சேர்ந்த நிகேடன், 32, என்பவர் அறிமுகமானார். அவர், திருமணம் செய்து கொள்வதாக கூறினார். 2022ம் ஆண்டு பெங்களூரு அழைத்துச் சென்றார்.அங்கு ஓட்டலில் அறை எடுத்து, 3 நாட்கள் தங்கினர். அப்போது நிகேடன், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில், அந்த பெண்ணுக்கு கோவையில் வேலை கிடைத்து, கோவை வந்தார். கோவை வந்த நிகேடன், அந்த பெண்ணை கோவையில் உள்ள ஓட்டலுக்கு அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதற்கிடையே, நிகேடனுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இதை அறிந்த அந்த பெண், நிகேடனிடம் கேட்டார். ஆத்திரமடைந்த நிகேடன், பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டல் விடுத்துள்ளார். அந்த பெண், மத்திய மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நிகேடன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

நிக்கோல்தாம்சன்
டிச 17, 2024 21:25

ஜெய்லாபிதீன் காதலித்த அந்த பெண்ணுக்கு யோசிக்கும் திறன் இருக்கா ?


Arul. K
டிச 17, 2024 06:38

படித்த, சம்பாதிக்கும் திமிர் மற்றும் பெற்றோரை மதிக்காததால் வந்த வினை


Mani . V
டிச 17, 2024 06:05

"........29 வயது இளம்பெண் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, தன்னுடன் பள்ளியில் படித்த இடையர்பாளையத்தை சேர்ந்த ஜெய்லாபுதீன் என்பவருடன் காதல் ஏற்பட்டது........". ஐ.டி, நிறுவனத்தில் பணி புரியும் அளவுக்கு புத்திசாலியான பொண்ணு, அவன் கூப்பிட்டான் என்று ஜாலியாக இருந்ததாகச் சொல்வது எங்கேயோ இடிக்குதே.


Mani . V
டிச 17, 2024 06:02

"........29 வயது இளம்பெண் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, தன்னுடன் பள்ளியில் படித்த இடையர்பாளையத்தை சேர்ந்த ஜெய்லாபுதீன் என்பவருடன் காதல் ஏற்பட்டது........". ஐ.டி, நிறுவனத்தில் பணி புரியும் அளவுக்கு புத்திசாலியான பொண்ணு, அவன் கூப்பிட்டான் என்று ஜாலியாக இருந்ததாகச் சொல்வது எங்கேயோ இடிக்குதே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை