வாசகர்கள் கருத்துகள் ( 1 )
குட் ஷெட் யு டர்ன் தேவை இல்லாத ஆணி.
கோவை; கோவையில் மேலும் இரு இடங்களில் 'யூ டேர்ன்' வசதி செய்ய, சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில், ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.கோவை நகர் பகுதியில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட இடங்களில், 'யூ டேர்ன்' மற்றும் 'ரவுண்டானா' வசதி ஏற்படுத்திக் கொடுத்ததால், வாகனங்கள் தேங்காமல் செல்கின்றன.தடாகம் ரோடு - லாலி ரோடு சந்திப்பு மற்றும் வடகோவை சிந்தாமணி பகுதியில் 'ரவுண்டானா' அமைத்திருப்பதால் போக்குவரத்து நெருக்கடி தவிர்க்கப்பட்டது. அவிநாசி ரோடு மற்றும் திருச்சி ரோட்டில், 'யூ டேர்ன்' வசதி செய்ததால், வாகனங்கள் நிற்காமல் பயணிக்கின்றன.அடுத்த கட்டமாக, லாலி ரோட்டில் பால் கம்பெனி அருகே உள்ள, தானியங்கி சிக்னலை அகற்றி விட்டு, சற்று துாரம் தள்ளிச் சென்று திரும்பிச் செல்லும் வகையில், 'யூ டேர்ன்' அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.இதேபோல், லங்கா கார்னர் அருகே, கூட்ஸ் ஷெட் ரோடு சந்திப்பு பகுதியில் உள்ள சிக்னல் பகுதியை அகற்றவும், கூட்ஸ் ஷெட் ரோட்டில் வருவோர் டவுன்ஹால் அல்லது கோட்டைமேடு வழியாக செல்ல வேண்டுமெனில், இடது புறம் திரும்பி லங்கா கார்னர் கடந்து திரும்பி வரும் வகையிலும், மாற்றம் செய்ய ஆலோசிக்கப்பட்டது.இவ்விரு மாற்றங்களையும், பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்திப் பார்க்க, சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.அதைத்தொடர்ந்து, மாநில நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு குழுவினர் இவ்விரு சிக்னல் பகுதிகளிலும் வாகன போக்குவரத்தையும், 'யூ டேர்ன்' அமைக்க வேண்டிய இடங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
குட் ஷெட் யு டர்ன் தேவை இல்லாத ஆணி.