உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சரியான நேரத்தில் உதயநிதியை துணை முதல்வராக அறிவிப்பர்

சரியான நேரத்தில் உதயநிதியை துணை முதல்வராக அறிவிப்பர்

தொண்டாமுத்தூர்: ''சரியான நேரத்தில் உதயநிதி துணை முதல்வராக அறிவிக்கப்படுவார்' என, அமைச்சர் மஸ்தான் தெரிவித்தார்.சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் நேற்று கோவை பேரூர் ஆதினம் மருதாசல அடிகளாரை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை நினைவு பரிசாக பேரூர் ஆதினத்துக்கு அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.அமைச்சர் மஸ்தான் நிருபர்களிடம் கூறுகையில், ''தமிழுக்காகவும், மத நல்லிணக்கத்திற்காகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் ஆதினத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு, துவக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். முன்னாள் முதல்வர் கருணாநிதி, சரியான நேரத்தில் ஸ்டாலினுக்கு, துணை முதல்வர் பதவியும், உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவியும் வழங்கினார். அதேபோல, முதல்வர் ஸ்டாலின் சரியான நேரத்தில் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவார். தி.மு.க., அரசில், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு கும்பாபிஷேகமும், கட்டுமான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முருக பக்தர்களை ஒருங்கிணைத்து மாநாடும் நடத்தப்பட்டது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ