உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இடம் பெயர முடியாமல் வனத்தில் யானைகள் தவிப்பு 

இடம் பெயர முடியாமல் வனத்தில் யானைகள் தவிப்பு 

வால்பாறை: வால்பாறையில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. பகல் நேரத்தில் வனப்பகுதியில் முகாமிட்டிருக்கும் யானைகள், இரவில் எஸ்டேட் வழியாக, உணவு மற்றும் குடிநீருக்காக வேறு பகுதிக்கு இடம் பெயர்கின்றன.இந்நிலையில், பெரும்பாலான எஸ்டேட் பகுதியில் உள்ள கோவில்களில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன், பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. ஒலிபெருக்கி சப்தத்தால், யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி இடம்பெயர முடியாமல் தவிக்கின்றன.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'எஸ்டேட் பகுதியில் யானைகள் அதிக அளவில் நடமாடுகின்றன. பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். அதிக சப்தம் ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கி அமைக்க கூடாது.இரவு நேரத்தில் யானைகள் நடமாடும் பகுதியில் மக்கள் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும். அதே போல் இருசக்கர வாகனத்தில் செல்வதையோ, தனியாக நடந்து செல்வதையோ தவிர்க்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை