பணம் செலுத்த முடியவில்லை: வங்கி வாடிக்கையாளர்கள் தவிப்பு
அன்னுார் : பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம்.,மில் பணம் செலுத்தும் இயந்திரம், ஐந்து மாதங்களாக செயல்படாததால், வாடிக்கையாளர்கள் தவிக்கின்றனர்.அன்னுார் வட்டாரத்தில் உள்ள, தொழில் நிறுவனங்களில் வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த, 10,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.இவர்களில் பெரும்பாலானோர் அன்னுார், சத்தி ரோட்டில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில், சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். இந்த வங்கியில் பணம் செலுத்தி, தங்கள் குடும்பத்திற்கு பணம் அனுப்புகின்றனர்.கடந்த மே மாதம், பாரத ஸ்டேட் வங்கி கிளையில் உள்ள பணம் செலுத்தும் இயந்திரம் (கேஷ் டெபாசிட் மெஷின்) பழுதானது.இதையடுத்து, வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்பு கணக்கில் இயந்திரம் வாயிலாக பணம் செலுத்த முடியவில்லை. வங்கியில் அதிக கூட்டம் இருப்பதால், டோக்கன் பெற்று இரண்டு மணி நேரம் காத்திருந்து, பணம் செலுத்த வேண்டியுள்ளது. இது குறித்து வங்கியில் கேட்டால், வங்கியின் தலைமை அலுவலகம்தான் முடிவு செய்ய வேண்டும் என்கின்றனர்.'அன்னுார் பாரத ஸ்டேட் வங்கி கிளையில், பணம் செலுத்தும் இயந்திரத்தை பழுது சரி பார்த்து, இயந்திரத்தில் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்த வேண்டும்' என, வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.