வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அவன் தான் போன் நம்பரோடு தில்லா போர்டு வெக்கிறானே... அதிகாரிங்க கமிஷன் வாங்காமலா அனுமதிச்சிருப்பாங்க?
கோவை: தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளுக்கு அருகிலோ, சாலை சந்திப்புகளிலோ, திருப்பங்களிலோ வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், விளம்பர பலகைகள் வைக்கக் கூடாதென, சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. இருந்தாலும், கோவையில் ஆங்காங்கே அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் அவற்றை அகற்றும்போது, இரும்பு சட்டங்களை அகற்றாமல் விட்டு விடுகின்றனர். அதனால், அதிகாரிகளின் கண்காணிப்பு குறைந்ததும், மீண்டும் விளம்பர பலகைகளை வைத்து விடுகின்றனர். நகரமைப்பு பிரிவினர் கண்டுகொள்வது இல்லை. காந்திபுரம் அருகே கணபதி செல்லும் வழித்தடத்தில், ரோட்டின் இருபுறமும் கட்டடங்களின் மேல்தளத்தில், மெகா சைஸ் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இவை, காந்திபுரம் மேம்பாலம் மற்றும் டெக்ஸ்டூல் பாலங்களில் செல்லும் வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்ப்பதால், விபத்து ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்குகிறது. சத்தி ரோடு, அவிநாசி ரோட்டில் பீளமேடு, ஹோப்ஸ் காலேஜ் பகுதியிலும் அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி, விபத்து ஏற்படுவதற்கு முன், மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவன் தான் போன் நம்பரோடு தில்லா போர்டு வெக்கிறானே... அதிகாரிங்க கமிஷன் வாங்காமலா அனுமதிச்சிருப்பாங்க?