உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் பாதாள சாக்கடை மேனுவல்

 வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் பாதாள சாக்கடை மேனுவல்

கோவை: கோவை நகரில் பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் பதிக்க ரோடு தோண்டப்பட்டதால், குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அவற்றை சீரமைக்கும் பணி மாநகராட்சியால் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, ரூ.620 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பழைய ரோட்டை பெயர்த்தெடுத்து விட்டு, புதிதாக போட வேண்டும். ரோடு எண்ணிக்கை மற்றும் கி.மீ. அதிகப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காக, மெயின் ரோட்டில் இரண்டு லேயரும், குறுக்கு வீதிகளில் ஒரு லேயரும் ரோடு போடப்படுகிறது. குறுக்கு வீதியில் ஏற்கனவே உள்ள ரோட்டின் மீதே போடுவதால், ரோடு உயர்ந்து விடுகின்றன. சில இடங்களில் பாதாள சாக்கடை மேனுவல் பகுதியை தார் கலவையால் மூடி விடுகின்றனர். அதன்பின், அப்பகுதியை தேடி கண்டுபிடித்து, தார் கலவையை பெயர்த்து எடுக்கின்றனர். ஆர்.எஸ்.புரத்தில் டி.பி.ரோட்டில் இணையும் கிழக்கு பெரியசாமி ரோட்டில் பளபளவென ரோடு போடப்பட்டு இருக்கிறது. தனியார் கண் மருத்துவமனைக்கு அருகே பாதாள சாக்கடை மேனுவல் சுற்றுப்பகுதி குழியாக காணப்படுகிறது. அப்பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். கவனம் சிதறினால், மேனுவல் இடறி விழுகின்றனர். இனியும் விபத்து தொடராத வகையில், மேனுவல் சுற்றுப்பகுதியை சீரமைக்க, மாநகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தடுமாறி கீழே விழுவோர் மீது, பின்னால் வரும் வாகனங்கள் மோதி, உயிர் சேதம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அத்தகைய நிகழ்வு நடப்பதற்கு முன், உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை