உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மழை முன்னெச்சரிக்கை; ஒன்றிய அதிகாரிகள் தீவிரம்

மழை முன்னெச்சரிக்கை; ஒன்றிய அதிகாரிகள் தீவிரம்

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு வட்டாரத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.கிணத்துக்கடவுக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முக்கியமாக, மலசர்பதி மற்றும் நரிக்குறவர் காலனியில் மழை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும், ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில், தாழ்வான பகுதி மற்றும் மழை நீர் தேங்கும் குடியிருப்பு பகுதிகளில், முன்னெச்சரிக்கை மற்றும் சுகாதார பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை காலங்களில் பாதிக்கப்படும் குடியிருப்பு வாசிகளை தங்க வைக்க, கிணத்துக்கடவு மற்றும் எஸ்.மேட்டுப்பாளையத்தில் உள்ள சமுதாய கூடத்தில் முகாம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பகுதியின் அருகாமையில் உள்ள அரசு பள்ளிகளிலும் பொதுமக்கள் தங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மழை காலங்களில் மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், முக்கிய இடங்களில் தண்ணீர் தேங்காத வகையில் பொக்லைன் இயந்திரம் வாயிலாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஒன்றிய அதிகாரிகள் மற்றும் தாசில்தார் முக்கிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இத்தகவலை, கிணத்துக்கடவு வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய்குமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை