பிரபஞ்ச அமைதி ஆசிரம வெள்ளி விழா
அன்னுார்; பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தின் வெள்ளி விழா வரும் 15, 16 தேதிகளில் நடைபெறுகிறது. அன்னுார் அருகே நல்ல கவுண்டம்பாளையத்தில் பிரபஞ்ச அமைதி ஆசிரமம் 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர், ஆதரவற்றோர் என 400 பேர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும் மனநல காப்பகம், ஆதரவற்ற முதியோர் காப்பகங்கள், நீலகிரி, திருப்பூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஆசிரமத்தின் வெள்ளி விழா, நன்கொடையாளர்கள் தின விழா, இலவச திருமண விழா என முப்பெரும் விழா நடைபெறுகிறது. வரும் 15ம் தேதி காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. வரும் 16ம் தேதி கோவை ஒய்ஸ்மேன் கிளப் உடன் இணைந்து 14 ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கப்படுகிறது.இரவு வரை கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. பொதுமக்கள் விழாவில் பங்கேற்க ஆசிரம நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.