உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பல்கலை ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்கலை ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை; கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலை ஆசிரியர் சங்கம் மற்றும் மதுரை காமராஜ், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா, அழகப்பா பல்கலை ஆசிரியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கோவை ரேஸ்கோர்ஸ் மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அரசு உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாடு, ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். யு.ஜி.சி., நெறிமுறைகளின்படி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு எம்.பில்., பி.எச்டி., பட்டத்துக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். யு.ஜி.சி., அறிவித்துள்ளபடி, பணியில் உள்ள ஆசிரியர்களின் இணை பேராசிரியர் பணி மேம்பாட்டுக்கு பி.எச்டி., கட்டாயம் என்பதை தளர்த்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மண்டல தலைவர் அன்பரசு தலைமை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை