மேலும் செய்திகள்
மருதமலை உண்டியலில் ரூ.91.70 லட்சம் காணிக்கை
07-Mar-2025
வடவள்ளி : மருதமலை அடிவாரத்தில், மருதமலை கோவிலில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தி, அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, நா.த.க., கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.நா.த.க., கட்சி சார்பில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தமிழில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தனர். போலீசார் அனுமதி மறுத்த நிலையில், நேற்று மாலை, மருதமலை அடிவாரத்தில், நாம் தமிழர் கட்சியினர், நோட்டீஸ் வினியோகித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை, வடவள்ளி போலீசார் கைது செய்து சமுதாயக்கூடத்தில் வைத்திருந்தனர். இரவு, 7:00 மணிக்கு அனைவரையும் விடுவித்தனர்.
07-Mar-2025