மேல்நீராறு அணையில் 71 மி.மீ., மழை பொழிவு
வால்பாறை: வால்பாறையில் பரவலாக பெய்யும் கனமழையால், மேல்நீராறு அணை பகுதியில், 71 மி.மீ., மழை பெய்தது. வால்பாறையில், கடந்த மாதம், 16ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்கிறது. ஆரம்பத்தில் சாரல்மழையாக பெய்த நிலையில், கடந்த இரு நாட்களாக கனமழை பெய்கிறது. இடைவிடாமல் பெய்யும் மழையால், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதோடு, அணைகளின் நீர்மட்டமும் உயரத்துவங்கியுள்ளது. சோலையாறு அணையின், 160 அடி உயரத்தில், நேற்று காலை, 68.65 அடி நீர்மட்டம் இருந்தது. பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், 56.73 அடி நீர்மட்டமும், ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், 62.15 அடி நீர்மட்டம் இருந்தது. நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழையளவு நிலவரம் (மி.மீ.,) வருமாறு: பரம்பிக்குளம் – 3, வால்பாறை – 36, மேல்நீராறு -– 71, கீழ்நீராறு – 35, காடம்பாறை – 25, சர்க்கார்பதி – 15, துாணக்கடவு – 10, பெருவாரிப்பள்ளம் – 8, மேல்ஆழியாறு – 2, நவமலை – 7 என்ற அளவில் மழை பெய்தது.