உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திருச்செந்துாருக்கு ரயில் இயக்க வலியுறுத்தல்

திருச்செந்துாருக்கு ரயில் இயக்க வலியுறுத்தல்

கிணத்துக்கடவு,; பொள்ளாச்சி வழியாக, ஈரோடு --- திருச்செந்துார் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்துகின்றனர்.பிப்ரவரி மாதம் தைப்பூச விழா நடக்க இருப்பதால், திருச்செந்துார் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகளவு இருக்கும். மேலும், கோடை காலம் முடியும் வரை பழநி மற்றும் திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவு சென்று வருவர்.கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, திருச்செந்துார் செல்ல, கிணத்துக்கடவு - -பொள்ளாச்சி மற்றும் பொள்ளாச்சி --- திருச்செந்துார் என இரண்டு ரயில் மாறும் நிலை உள்ளது. இதனால், பயணியர் சிறப்பு பஸ் வாயிலாக பயணம் மேற்கொள்கின்றனர்.எனவே, ரயில்வே நிர்வாகம் சார்பில், ஈரோட்டில் இருந்து கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, பழநி மார்க்கமாக திருச்செந்துார் வரை, இரவு நேர சிறப்பு ரயில் இயக்க வேண்டும். இதனால், அதிக அளவு பயணியர் கோவிலுக்கு எளிதாக செல்ல முடியும். எனவே, தெற்கு ரயில்வே நிர்வாகம், இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என, ரயில் பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை