மேலும் செய்திகள்
இன்று இனிதாக .... (03.08.2025) காஞ்சிபுரம்
03-Aug-2025
அன்னுார்; குன்னத்தூர் உருகாதேஸ்வரி அம்மன் கோவில் ஆண்டு விழா நாளை (2ம் தேதி) நடைபெறுகிறது. அன்னுார் அருகே மசக்கவுண்டன் செட்டிபாளையத்தில், பிரசித்தி பெற்ற உம்மத்தூர் உருகாதேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நான்காம் ஆண்டு கும்பாபிஷேக விழா நாளை (2ம் தேதி) நடைபெறுகிறது. காலை 8:00 மணிக்கு கணபதி ஹோமம் நடக்கிறது. காலை 10:30 மணிக்கு அம்மனுக்கு, பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேக பூஜையும், கலச தீர்த்தம் ஊற்றுதலும் நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு அலங்கார பூஜை நடைபெறுகிறது. இதையடுத்து மகா தீபாராதனையும், அன்னதானமும் நடைபெறுகிறது. ''விழாவில் பங்கேற்று இறையருள் பெறலாம், என நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
03-Aug-2025