உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காவல் உதவி ஆப் பயன்படுத்துங்கள்! தனியாக வசிப்போருக்கு விழிப்புணர்வு

காவல் உதவி ஆப் பயன்படுத்துங்கள்! தனியாக வசிப்போருக்கு விழிப்புணர்வு

பொள்ளாச்சி; பண்ணை வீடு மற்றும் கிராமப்புற வீடுகளில், தனியாக வசிப்பவர்கள் போலீசாரின் எஸ்.ஓ.எஸ்., எனும் அவசரகால 'ஆப்'பை, அவரவர் மொபைல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும், என, தெரிவிக்கப்பட்டது.கோவை மாவட்டத்தில், சமீபகாலமாக திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. குறிப்பாக, கிராமப்புறங்களில், தோட்டங்கள் மற்றும் பண்ணை வீடுகளில் தனியாக வசிப்பவர்கள், முதியோர்களை நோட்டமிட்டு, பணம் மற்றும் நகைகளை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து வருகின்றனர்.இத்தகைய சம்பவங்கள் நடக்காமல் தவிர்க்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், போலீசார், கிராமப்புறங்களில் உள்ள தோட்டங்கள் மற்றும் பண்ணை வீடுகளில் வசித்து வருபவர்களின் விபரங்களை சேகரித்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி அருகே வடக்கிப்பாளையம் சுற்றுப்பகுதியில் உள்ள பண்ணை வீடுகள் மற்றும் கிராமப்புற வீடுகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.எஸ்.பி., கார்த்திகேயன் தலைமை வகித்து பேசியதாவது:பண்ணை வீடு மற்றும் கிராமப்புற வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். கதவுகளில் எச்சரிக்கை அலாரம் அமைப்பதுடன், பாதுகாப்பிற்காக நாய் வளர்க்க வேண்டும். சந்தேகப்படும்படி நபர்கள் கண்டறியப்பட்டால், உடனடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.'காவல் உதவி' ஆப் வயிலாக, போலீஸ் ஸ்டேஷன் இருப்பிடம் அறிதல், அவசர எச்சரிக்கை தகவல்களை அனுப்புதல், புகார்களை பதிவு செய்தல், எப்.ஐ.ஆர்., விபரங்கள் மற்றும் காணாமல் போன ஆவணங்களை குறித்த தகவல்களை பெற முடியும்.குறிப்பாக, போலீசாரின் 'காவல் உதவி' அவசரகால 'ஆப்'பை, அவரவர் மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ