பழனி ஆண்டவர் கோவிலில் நாளை வைகாசி விசாக விழா
அன்னூர்: சாலையூரில் பல நூறு ஆண்டுகள் பழமையான, பழனி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பத்தாவது ஆண்டாக, வைகாசி விசாக விழா நாளை நடைபெறுகிறது. நாளை மாலை 3:30 மணிக்கு, கணபதி ஹோமம் மற்றும் பழனி ஆண்டவருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக பூஜை நடைபெறுகிறது. மாலை 6:00 மணிக்கு, 108 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.சிரவை ஆதினம் குமரகுருபர சாமிகள், சின்னச்சாமி சித்தர் உள்பட பலர் பங்கேற்கின்றனர். விழாவில் பங்கேற்று இறையருள் பெற, விழா குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.