மேலும் செய்திகள்
பைக் விபத்து வாலிபர் காயம்
12-Aug-2025
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி ரோட்டில் பைக்கில் சென்றவர் ஆம்னி வேன் மோதியதில் உயிரிழந்தார். கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரசாத், 49. இவர், கொண்டம்பட்டி ரோட்டில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார். நேற்று, கல்லூரி பயன்பாட்டிற்காக, பைக்கில் பெட்ரோல் நிரப்ப சென்ற போது, அதே ரோட்டில் எதிர் திசையில் கிணத்துக்கடவை சேர்ந்த கதிரேசன், 27, என்பவர் ஓட்டி வந்த ஆம்னி வேன், பைக் மீது மோதியது. விபத்தில் காயமடைந்த பிரசாத்தை அப்பகுதி மக்கள் மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, கிணத்துக்கடவு போலீசார் ஆம்னி வேன் டிரைவர் கதிரேசனிடம் விசாரணை செய்த போது, அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கதிரேசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
12-Aug-2025