மேலும் செய்திகள்
கோரிக்கைகளை வலியுறுத்தி த.வெ.க. ஆர்ப்பாட்டம்
23-Sep-2025
வால்பாறை;தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக, 600 ரூபாய் வழங்க கோரி, வி.சி. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வால்பாறை தாலுகா விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்ட் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தலைவர் வீரமணி தலைமை வகித்தார். மாநில இணை பொதுச்செயலாள் கனியமுதன், மாநில செய்தி தொடர்பாளர் பாவளன், சங்க பொதுச்செயலாளர் கேசவமருகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக நகர செயலாளர் வேல்முருகன் வரவேற்றார். வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, கடந்த, 2021ல் தமிழக அரசு அறிவித்த குறைந்தபட்ச கூலிக்கான அரசாணை காலாவதியாகி விட்டதால், புதிய அரசாணை வெளியிட வேண்டும். கடந்த, ஜூலை 31 முதல் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக, 600 ரூபாய் வழங்க வேண்டும். 'டான்டீ' தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தமிழக அரசு, 2022ம் ஆண்டு வெளியிட்ட அரசாணையின் படி, 10 லட்சம் ரூபாய் முதல், 15 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு தொகையாக வழங்க வேண்டும். மேலும், டான்டீ தேயிலை தோட்டத்திலிருந்து வெளியேறும் தொழிலாளர்களுக்கு, தலா, 3 சென்ட் நிலம் அல்லது நகர்புற வாழ்விட குடியிருப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
23-Sep-2025