| ADDED : பிப் 15, 2025 11:09 PM
கோவை: கோவையில் வேங்கை வயல் வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், சிவானந்தா காலனி பவர் ஹவுஸ் எதிரில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தி.மு.க., அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த, வி.சி., மாவட்ட தலைவர் கோவை குமணன் கூறுகையில், ''வேங்கை வயல் பிரச்னையில், உண்மையான குற்றவாளிகளை விட்டு விட்டு, தி.மு.க., அரசு பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக சித்தரிக்கிறது. சி.பி.சி.ஐ.டி., நடத்தும் விசாரணையில், எங்களுக்கு நம்பிக்கையில்லை. அதனால் இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதிகளை கொண்டு, விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகள் கண்டறிந்து, தண்டிக்கப்பட வேண்டும்,'' என்றார்.