உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மழையால் காய்கறி வரத்து குறைவு

மழையால் காய்கறி வரத்து குறைவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், மழையால் காய்கறிகள் வரைந்து குறைந்துள்ளது.கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில்,நேற்று, தக்காளி (15 கிலோ பெட்டி) --- 190, தேங்காய் (ஒன்று)- -- 30, கத்தரிக்காய் கிலோ -- 33, முருங்கைக்காய் --- 50, வெண்டைக்காய் --- 30, முள்ளங்கி --- 15, பூசணிக்காய் --- 8, அரசாணிக்காய் --- 8, பாகற்காய் --- 45, புடலை --- 17, சுரைக்காய் --- 13, பீர்க்கங்காய் --- 35, பீட்ரூட் --- 20, அவரைக்காய் --- 90, பச்சை மிளகாய் - 30 ரூபாய்க்கு விற்பனையானது.கடந்த வாரத்தை விட தேங்காய் (ஒன்று) - 3, முருங்கைக்காய் கிலோ - -10, முள்ளங்கி --- 3, பூசணிக்காய் --- 2, பாகற்காய் மற்றும் பீர்க்கங்காய் -- 10 ரூபாய் விலை குறைந்துள்ளது.வியாபாரிகள் கூறுகையில், கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில் மழை தீவிரமடைந்துள்ளதால், காய்கறி வரத்து குறைந்துள்ளது. அதே நேரத்தில் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ