உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உழவர் சந்தையில் ரூ.45.39 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

உழவர் சந்தையில் ரூ.45.39 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உழவர் சந்தை செயல்படுகிறது. இங்கு, 78 கடைகள் உள்ளன. தினமும் அதிகாலை, 4:30 மணிக்கு திறந்து, 11:30 மணி வரை சந்தை திறந்திருக்கும். 128 விவசாயிகள் அடையாள அட்டை பெற்றுள்ளனர். இவர்கள் தங்கள் நிலங்களில் விளையும், காய்கறிகளை எடுத்து வந்து, சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். தினமும், 70 லிருந்து 75 விவசாயிகள், சராசரி, 32 லிருந்து, 34 டன் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதேபோன்று தினமும், 3,500 லிருந்து, 4000 பொதுமக்கள், வியாபாரிகள் உழவர் சந்தைக்கு வந்து, காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். பஸ் ஸ்டாண்ட் அருகே, உழவர் சந்தை இருப்பதால், பொதுமக்களும், விவசாயிகளும் எளிதாக வந்து செல்வதற்கு வசதியாக உள்ளது. தோட்டக்கலைத்துறைக்கு உட்பட்ட உழவர் சந்தையை, நிர்வாக அலுவலர் வினோத்குமார், உதவி நிர்வாக அலுவலர்கள் செந்தில், சுபாஷ், லோகேஷ் ஆகியோர் உழவர் சந்தையை கண்காணித்து நிர்வாகம் செய்து வருகின்றனர். இதுகுறித்து உழவர் சந்தை நிர்வாக அலுவலர் வினோத் குமார் கூறுகையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து, ஜனவரி மாதம் வரை, 10 மாதங்களில் காய்கறிகள் விற்பனை செய்ததன் வாயிலாக, 45.39 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, 20 ஆயிரத்து, 718 விவசாயிகளும், 12 லட்சத்து, 60 ஆயிரத்து, 343 பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகளும் பயன்பெற்றுள்ளனர். பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அந்த விவசாயிக்கு அபராதம் விதிக்கப்படும் என, எச்சரிக்கை செய்யப்பட்டதால், பிளாஸ்டிக் கேரிபேக் பயன்படுத்துவது இல்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை