வாகன விற்பனையாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி தாலுகா வாகன விற்பனையாளர்கள் மற்றும் நலசங்கத்தின் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், திருவள்ளுவர் திடலில் நேற்று நடந்தது. பொருளாளர் கணேஷ் பிரசாத், செயலாளர் தங்கவேல் முன்னிலை வகித்தனர்.தமிழக அரசின் வட்டார போக்குவரத்து துறையில் புதிய சட்டத்தின் படி, ஆர்.சி., புத்தகத்தை தபாலில் வழங்குவதை ரத்து செய்ய வேண்டும். பழைய சட்டத்தின் படி ஆர்.சி., புத்தகம் நேரில் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், வாகன வணிகர்களால் வழங்கப்படும் ஆவணங்களை அலுவலக பணி முடித்து, மீண்டும் எங்களிடம் வழங்காமல் அந்த வாகனத்தை எங்களிடம் விற்பனை செய்த அதன் உரிமையாளரின் முகவரிக்கு நேரடியாக தபாலில் அனுப்பும் செயல்முறை தற்போது உள்ளது.இந்த நடைமுறையால் வாகன வணிகர்கள் வாழ்வாதரம் முற்றிலும் முடங்கி போயுள்ளது. எனவே, தபாலில் அனுப்பும் நடைமுறையை முற்றிலுமாக நீக்க வேண்டும், என வலியுறுத்தினர்.