சர்வீஸ் ரோடு யு டேர்ன் பகுதியில் வாகன பார்க்கிங்
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு மேம்பாலம் கீழ்ப்பகுதியில் உள்ள சர்வீஸ் ரோட்டில், அதிகளவு வாகன போக்குவரத்து உள்ளது. கோவை மற்றும் பொள்ளாச்சி வழி சர்வீஸ் ரோடுகள் ஒரு வழி பாதையாக உள்ளது. ஆனால், வாகன ஓட்டுநர்கள் பலர் இந்த இரண்டு ரோடுகளையும், இருவழிப்பாதை போல் பயன்படுத்துகின்றனர். இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.தற்போது, சர்வீஸ் ரோட்டின், 'யு டேர்ன்' பகுதியில் அதிகளவு நான்கு சக்கர வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுகிறது. இதனால், இவ்வழியில் திரும்பும் வாகனங்கள் மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட்டில் இருந்து உள்ளே மற்றும் வெளியே செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. சில நேரங்களில் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன.எனவே, சர்வீஸ் ரோடு, 'யு டேர்ன்' பகுதியில் வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.