கோவில் முன் இடையூறாக வாகனங்கள் நிறுத்தம்; பக்தர்கள் பாதிப்பு
இடையூறாக வாகனங்கள் நிறுத்தம்
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் முன் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் அடிக்கடி நிறுத்தப்படுகிறது. இதனால் ரோட்டில் வரும் மற்ற வாகனங்கள் ரோட்டை கடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. எனவே, இதைத்தடுக்க போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -- விமல், வால்பாறை. போர்வெல் பழுது
கிணத்துக்கடவு பெரியார் நகர் நான்காவது வீதியில், போர்வெல் பல நாட்களாக பழுதடைந்து இருப்பதால், பகுதி மக்கள் தண்ணீருக்கு சிரமப்படும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் சார்பில், இதை கவனித்து உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். -- ராஜ், கிணத்துக்கடவு. தடுப்புகள் அமைக்கணும்
பொள்ளாச்சி - - கோவை ரோடு ஆச்சிப்பட்டியில் சர்வீஸ் ரோட்டோரம் உள்ள இரும்பு தடுப்புகள் விபத்தால் சேதமடைந்தது. பல நாட்களாகியும் தடுப்புகள் சரி செய்யாததால் அவ்வழியாக செல்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் உடனடியாக தடுப்புகளை சீரமைப்பு செய்ய வேண்டும். -- கண்ணன், பொள்ளாச்சி. அரசு அலுவலகத்தில் புதர்
கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள பழைய கட்டடங்களின் சுற்று புறத்தில் அதிக அளவு செடி கொடிகள் முளைத்து உள்ளது. இதனால் விஷ ஜந்துக்கள் இருக்கும் என மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, அரசு வளாகத்தில் உள்ள புதர்களை அகற்றம் செய்ய வேண்டும்.-- பாரத், கிணத்துக்கடவு. ' குடி' மகன்கள் தொல்லை
உடுமலை பார்க் ரோடு நகராட்சி பள்ளி முன், 'குடி'மகன்கள் குடித்துவிட்டு மதுபாட்டில்களை போட்டுவிட்டு சென்றுள்ளனர். இதனால், அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- முருகன், உடுமலை. போக்குவரத்து நெரிசல்
உடுமலை, சத்திரம் வீதியில் சரக்கு வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. காலை நேரங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இரண்டு சக்கர வாகனங்கள் செல்வதற்கு வழியில்லாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி வருவதால், அவ்வழியாக பொதுமக்கள் நடந்துசெல்வதற்கும் முடியாமல் சிரமப்படுகின்றனர்.- ராஜ்குமார், உடுமலை. தெருவிளக்குகள் எரிவதில்லை
உடுமலை, ராமசாமிநகர் இரண்டாவது வீதியில் தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் மாலை நேரங்களில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்திருக்கிறது. வாகன ஓட்டுநர்கள் ரோட்டில் உள்ள வேகத்தடைகளையும் கவனிக்க முடியாமல் அடிக்கடி தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். தெருவிளக்குகளை சரி செய்வதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மணிகண்டன், உடுமலை. குடிநீர் தொட்டி சேதம்
உடுமலை சிங்கப்பூர் நகர் நகராட்சி துவக்கப்பள்ளி கட்டடம் சேதமடைந்து குடிநீர் தொட்டி செயல்படாமல் உள்ளது. இதை நகராட்சி அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கணேசன், உடுமலை. அடையாளம் இல்லை
பெரியகோட்டை ஊராட்சி காந்திநகர் இரண்டாவது வீதியில் வேகத்தடைகள் அடையாளம் இல்லாமல் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். இரவு நேரங்களில் அதிவேகமாக வரும் வாகனங்கள் வேகத்தடையில் கட்டுபடுத்த முடியாமல் எதிரே வருவோர் மீது மோதும் வகையில் தடுமாறி செல்கின்றன.- திலகவதி, பெரியகோட்டை.