உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒன் வேயில் செல்லும் வாகனங்கள்; விபத்து ஏற்படும் அபாயம்

ஒன் வேயில் செல்லும் வாகனங்கள்; விபத்து ஏற்படும் அபாயம்

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப் பகுதியில், 'ஒன் வே'யில் வாகனங்கள் செல்வதால் விபத்து அபாயம் நிலவுகிறது.கிணத்துக்கடவு பகுதியில் மேம்பாலத்தின் கீழ் உள்ள சர்வீஸ் ரோட்டில், பழைய பஸ் ஸ்டாப் அருகே 'யூ டர்ன்' பகுதி உள்ளது. இதன் அருகாமையில் வடசித்துார் செல்லும் ரோடு உள்ளது.இப்பகுதியில் வணிக வளாகங்கள், கடைகள், ஆட்டோ ஸ்டாண்ட், பஸ் ஸ்டாப் உள்ளதால், பயணியரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். மேலும், இங்கு கடைக்கு வருபவர்கள் பலர், சர்வீஸ் ரோட்டில் பைக் மற்றும் கார்களை நிறுத்திச்செல்கின்றனர். இதனால் மற்ற வாகனங்களுக்கு, இப்பகுதியை கடக்க சிரமம் ஏற்படுகிறது.இது மட்டுமின்றி, பஸ் மற்றும் கனரக வாகனங்கள், பொள்ளாச்சி ரோட்டில் இருந்து வடசித்துார் ரோட்டிற்கு திரும்பும் போது, கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்டில் இருந்து வடசித்துாருக்கு செல்லும் போதும், சர்வீஸ் ரோட்டோரத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பெரிய வாகனங்கள் திரும்ப சிரமப்படுகின்றன.மேலும், வடசித்துார் ரோட்டில் இருந்து வரும் லாரிகள், கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்ட் வழியாக சென்று திரும்ப வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, 'ஒன் வே'யில் இயக்கப்படுகின்றன.இதனால், இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படுகிறது. இதைத்தவிர்க்க, கிணத்துக்கடவு செக்போஸ்ட் வழியாக, கனரக வாகனங்களை இயக்க வேண்டும். மேலும், பஸ் ஸ்டாண்ட் அருகே ரோட்டோரத்தில், வாகனங்கள் நிற்காத வகையில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் அறிவிப்பு வைக்க வேண்டும்.இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை ஓரளவு குறைக்க முடியும். மேலும், 'ஒன் வே'யில் பயணிக்கும் வாகனங்கள் மீது, போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !