மேலும் செய்திகள்
விதிமீறிய 155 வாகனங்களுக்கு ரூ.22 லட்சம் அபராதம்
06-Aug-2025
கோவை : சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவதாக, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு, கோவை டாக்ஸி ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் சார்பில், புகார்கள் தெரிவிக்கப்பட்டன. கோவை சென்ட்ரல் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் விஸ்வநாதன் தலைமையில், நேற்று சிறப்பு சோதனை நடத்தப்பட்டது. இதில் புகார் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, ஆறு சொந்த பயன்பாட்டு வாகனங்கள், 12 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.1.80 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
06-Aug-2025