உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கபடி போட்டியில் விழுப்புரம் அணியை தட்டித் துாக்கிய வேலுார் அணி வீரர்கள்

கபடி போட்டியில் விழுப்புரம் அணியை தட்டித் துாக்கிய வேலுார் அணி வீரர்கள்

கோவை; மின் வாரிய ஊழியர்களுக்கான கபடி போட்டியில் வேலுார் அணி, 40-20 என்ற புள்ளிகளில் விழுப்புரம் அணியை வென்றது.தமிழ்நாடு மின் வாரிய ஊழியர்களுக்கு மண்டலங்களுக்கு இடையே, ஆண்களுக்கான விளையாட்டு போட்டிகள், கோவையின் பல்வேறு மைதானங்களில் கடந்த, 30ம் தேதி முதல் வரும், 5ம் தேதி வரை நடக்கின்றன.இதில், கோவை, ஈரோடு, சென்னை, மதுரை, நெல்லை உட்பட எட்டு மண்டலங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மூன்றாம் நாளான நேற்று நடந்த கபடி போட்டியில், வேலுார் அணியும், விழுப்புரம் அணியும் மோதின. இதில், வேலுார் அணி, 40-20 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றது.பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த கூடைப்பந்து முதல் அரையிறுதியில், சென்னை அணியும், மதுரை அணியும் மோதின. இதில், சென்னை அணி, 21-6 என்ற புள்ளிகளில் மதுரை அணியை வென்றது. இரண்டாம் அரையிறுதியில், திருச்சி அணியும், கோவை அணியும் விளையாடின. இதில், திருச்சி அணி, 32-23 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றது. தொடர்ந்து, கிரிக்கெட், கூடைப்பந்து, கேரம் போட்டிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !