உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சூலுாரில் பூத் கமிட்டி கூட்டம்: பரேடு நடத்திய வேலுமணி

சூலுாரில் பூத் கமிட்டி கூட்டம்: பரேடு நடத்திய வேலுமணி

கோவை: அ.தி.மு.க., பூத் கமிட்டி கூட்டத்தில், ஒவ்வொரு பொறுப்பாளரையும் தனித்தனியே சந்தித்த முன்னாள் அமைச்சர் வேலுமணி, அந்தந்த பகுதியில் உள்ள பிரச்னைகள், பின்னடைவுகள் குறித்து வெளிப்படையாக பேசினார்.கோவை மாவட்டத்தில், தொகுதி வாரியாக அ.தி.மு.க., பூத் கமிட்டிக் கூட்டம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. நேற்று சூலூர் தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர் வேலுமணி ஒன்றியம் வாரியாக, ஒவ்வொரு பூத் கமிட்டி பொறுப்பாளரையும் தனித்தனியாக சந்தித்து, பூத் கமிட்டி நிர்வாகிகள் பட்டியலைப் பெற்று சரிபார்த்து, ஆலோசனைகளை வழங்கினார்.ஒவ்வொரு பொறுப்பாளரையும் அழைக்கும்போது, அந்தப் பகுதியின் கட்சி உட்கட்டமைப்பு, உட்கட்சி முரண்பாடுகள், செயல்பட வேண்டிய முறை என தனித்தனியாக குறிப்பிட்டு பேசியதால், கட்சி நிர்வாகிகள் உற்சாகமடைந்தனர்.இருகூர் பேரூராட்சி பகுதி பொறுப்பாளரை அழைத்துப் பேசும்போது, “இடைத்தேர்தல் நடந்தபோது அங்கு கட்சியினர் முகாமிட்டு, கடும் வேலை செய்து பேரூராட்சித் தலைவராக வெற்றி பெறச் செய்தோம். அப்படியானால் நீங்கள் அங்கு கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்த, இரு மடங்கு வேகத்தில் பணி செய்ய வேண்டும்,” என அறிவுறுத்தினார்.இப்படி, ஒவ்வொரு பொறுப்பாளரையும் அவர்களின் பிளஸ், மைனஸ் குறிப்பிட்டு பேசியதால், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மகிழ்ச்சியும், கலக்கமும் அடைந்துள்ளனர்.திறமையாக பணியாற்றினால் பரிசும், சுணக்கம் காட்டினால் நடவடிக்கையும் பாயும் என, வேலுமணி கோடிட்டுக் காட்டியுள்ளதால், கோவை அ.தி.மு.க.,வில் தேர்தல் ஆயத்தப் பணி களைகட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி