உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு வேலுமணி நிலம் பரிசு

ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு வேலுமணி நிலம் பரிசு

தொண்டாமுத்தூர் : வடிவேலம்பாளையத்தில், பல ஆண்டுகளாக சேவை மனப்பான்மையோடு ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வரும் கமலாத்தாள் பாட்டிக்கு, முன்னாள் அமைச்சர் வேலுமணி, 1.75 சென்ட் இடத்தை பத்திர பதிவு செய்து, பரிசாக வழங்கினார்.வடிவேலாம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள்,90. கணவரை இழந்த நிலையில், இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த இட்லி கடையில், லாப நோக்கமில்லாமல், சேவை மனப்பான்மையோடு, ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருகிறார்.இதுகுறித்து, முதன் முதலில் நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து, அப்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உட்பட பல தரப்பினரும், கமலாத்தாள் பாட்டியை பாராட்டி கவுரவித்தனர்.மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா, கமலாத்தாள் பாட்டியை பாராட்டியதோடு 1.75 சென்ட் நிலம் வழங்கி, அதில், கமலாத்தாள் பாட்டிக்கு வீடு மற்றும் கடை கட்டி கொடுத்தார்.இந்நிலையில், முன்னாள் அமைச்சர் வேலுமணி, நேற்று தனது சொந்த செலவில், கமலாத்தாள் பாட்டிக்கு, 1.75 சென்ட் நிலம் வாங்கி கொடுத்திருந்தார். பாட்டியின் பெயரில் பதிவு செய்த பத்திரத்தை, வேலுமணி மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள், கமலாத்தாள் பாட்டியிடம் நேற்று வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி