உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மிக நீண்ட இழை பருத்தி திறன் மேம்பாடு பயிற்சி

மிக நீண்ட இழை பருத்தி திறன் மேம்பாடு பயிற்சி

தொண்டாமுத்தூர்: வேளாண்மைத்துறை சார்பில், மிக நீண்ட இழை பருத்தி திறன் மேம்பாடு மற்றும் களப்பயிற்சி, காளியண்ணன்புதூரில் நடந்தது. வேளாண்மை அலுவலர் முகமது தாரிக் வரவேற்றார். தொண்டாமுத்தூர் வட்டார வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் சக்திவேல் தலைமை வகித்தார். மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் காஞ்சனா மற்றும் வளர்மதி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மண் மாதிரி எடுத்தல், பருத்தி ரகம் தேர்வு செய்தல், உரிய காலத்தில் விதைத்தல், களை மேலாண்மை, மண்வளம் சார்ந்து உரமிடுதல், பருத்தியில் நுண்ணூட்ட கலவை உரப்பயன்பாட்டின் முக்கியத்துவம், அறுவடைக்குப்பின் பருத்தி சாகுபடி களம் சுகாதார மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !