மேலும் செய்திகள்
அரசு மருத்துவமனையில் மேம்பாட்டு பணிகள்
23-Jun-2025
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனத்துறை சார்பில், வேழம் இயலியல் பூங்கா அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் வனத்துறை மர கிடங்கு உள்ளது. இந்த வளாகத்தில், வேழம் இயலியல் பூங்கா அமைக்கும் பணி கடந்த 2020--2021ம் ஆண்டு துவங்கப்பட்டது. பாதி பணிகளுக்கும் மேல் நிறைவடைந்த நிலையில், பூங்கா பணிகள் நிதி பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டன. தற்போது மீண்டும் கடந்த மார்ச் மாதம் ரூ.14 லட்சம் நிதியை தமிழக அரசு ஒதுக்கியது. தற்போது பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுகுறித்து, மேட்டுப்பாளையம் வனச்சரகர் சசிக்குமார் கூறியதாவது:- அனைத்து வகையான யானைகளின் விவரங்கள் வேழம் பூங்காவில் காட்சிப்படுத்தப்படும். மேலும், குழந்தைகள், பெரியவர்கள் என எல்லாரும் யானைகளைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக, விழிப்புணர்வு மையம் மற்றும் விளக்கப் பூங்கா, ஆகியவை அமைக்கப்படுகிறது. இதுபோன்று பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
23-Jun-2025