உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சட்டசபை தேர்தலில் வெற்றியே இலக்கு! எம்.ஜி.ஆர்., நினைவு நாளில் உறுதியேற்பு

 சட்டசபை தேர்தலில் வெற்றியே இலக்கு! எம்.ஜி.ஆர்., நினைவு நாளில் உறுதியேற்பு

: பொள்ளாச்சி நகர அ.தி.மு.க. சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின், 38வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மலர் துாவி கட்சி மரியாதை செலுத்தினர். ஒன்றிய செயலாளர் சக்திவேல், கோவை மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் விஜயகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ரகுபதி, மாவட்ட பிரதிநிதி அருணாச்சலம், நகர பொருளாளர் கனகு முன்னிலை வகித்தனர். சட்டசபை தேர்தலில் முழு உழைப்பை வெளிப்படுத்தி அ.தி.மு.க. ஆட்சி அமைக்க பாடுபடுவோம் என நிர்வாகிகள் உறுதியேற்றனர். * சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி கழகம் சார்பில் நடந்த விழாவில், எம்.ஜி.ஆர். உருவபடத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. * வால்பாறை நகர செயலாளர் மயில்கணேஷ் தலைமையில், எம்.ஜி.ஆர்.,படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நகர துணை செயலாளர் பொன்கணேஷ், நகர வர்த்தக அணி செயலாளர் சண்முகவேல், வக்கீல் பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். * வால்பாறை புதுமார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள அ.தி.மு.க., தொழிற்சங்க அலுவலகத்தில் தலைவர் அமீது, எம்.ஜி.ஆர்.,படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினார். அவைத்தலைவர் பாலு, மாவட்ட பாசறை இணை செயலாளர் சலாவுதீன், மாவட்ட பேரவை செயலாளர் நரசப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ரொட்டிக்கடையில் எம்.ஜி.ஆர்., சிலைக்கும் அ.தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். * உடுமலை வடக்கு ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சி, காந்திபுரத்தில், எம்.ஜி.ஆர்., திருஉருவ படத்திற்கு, திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், மடத்துக்குளம் எம்.எல்.ஏ., யுமான மகேந்திரன் மலர் தூவி, மரியாதை செலுத்தினார். கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். * கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப்பில், எம்.எல்.ஏ. தாமோதரன், பேரூராட்சி செயலாளர் மூர்த்தி, கட்சி நிர்வாகிகள் எம்.ஜி.ஆரின் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தனர். - நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ