உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பயணம் நிறைவு செய்த விஸ்தாரா விமானங்கள்

பயணம் நிறைவு செய்த விஸ்தாரா விமானங்கள்

கோவை ; கோவை விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகள், உள்நாட்டு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.விஸ்தாரா ஏர்லைன்ஸ் கோவையிலிருந்து டில்லி, மும்பை, பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு விமான சேவையை கடந்த, 2022 ம் ஆண்டு துவங்கியது. இவ்விமான நிறுவனம், ஏர் இந்தியாவுடன் இணைய உள்ளது. இன்று முதல், இந்நிறுவனத்தின் விமானங்கள் ஏர் இந்தியா நிறுவனத்தின் பெயரில் இயக்க உள்ளன. இதையடுத்து நேற்று கோவையிலிருந்து இயக்கப்பட்ட விஸ்தாரா நிறுவனத்தின் விமானங்கள் தனது கடைசி பயணத்தை மேற்கொண்டன. ஏர் இந்தியாவுடன் ஒருங்கிணைய உள்ள நிலையில், பயணிகள் தங்களின் கடைசி விமான அனுபவங்களையும், விஸ்தாரா உடனான நீண்ட கால உணர்வுப்பூர்வ தொடர்பையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.விஸ்தாரா விமானங்கள் இயங்கிய வழித்தடங்களில், இனி ஏர் இந்தியா விமானங்கள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை