உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு மருத்துவமனையில் உயிர்க்குறிகள் மையம்

அரசு மருத்துவமனையில் உயிர்க்குறிகள் மையம்

கோவை; கோவை அரசு மருத்துவமனையில், அத்தியாவசிய அடிப்படை பரிசோதனை மையம் புதிதாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சர்க்கரை, ரத்த அழுத்தம், போன்ற பாதிப்புகளால் பல்வேறு இணை நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பரிசோதனை செய்து கொள்ள வசதியாகவும், அரசு மருத்துவமனையில் பிரத்யேக மையம் துவக்கப்பட்டுள்ளது. 'உயிர்க்குறிகள் மையம்' என்ற பெயரில் துவக்கப்பட்டுள்ள இம்மையத்தில், உயரம், எடை, நாடித்துடிப்பு, ஆக்சிஜன் அளவு, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகிய ஆறு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இப்பரிசோதனைகளை நோயாளிகள் மட்டுமின்றி, உடன் வரும் உறவினர்கள், பொதுமக்கள் யார் வேண்டுமானாலும், இலவசமாக செய்து கொள்ள முடியும். இம்மையம், மருத்துவமனையின் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ