உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 2.72 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம்

2.72 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம்

கோவை : பொது சுகாதாரத்துறையின் கீழ், வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் முகாம், கடந்த வாரம் மாவட்டம் முழுவதும் நடந்தது. இதல், 2.72 லட்சம் குழந்தைகளுக்கு திரவம் வழங்கப்பட்டது. தேசிய அளவில் ஆண்டுதோறும், இருமுறை வைட்டமின் ஏ திரவம், ஆறு மாதம் முதல் ஐந்து வயது உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. வைட்டமின் ஏ குறைபாடு காரணமாக, வறண்ட விழித்திரை, விழிவெண் திரையில் முக்கோண வடிவத்தில் வெண்ணிறமாக தடித்தல், மாலைக்கண் நோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இதை தடுக்கவே, வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படுகிறது. கடந்த, 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை முகாம் நடைபெற்றது. இதில், பல்வேறு சுகாதாரத்துறை, அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளிக்கல்வித்தறை உள்ளிட்ட அரசுத்துறை சார்ந்த, 2,408 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதுகுறித்து, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுச்சாமி கூறுகையில், '' புதன் கிழமை நீங்கலாக, 17 முதல் 22 தேதி வரை முகாம் நடைபெற்றது. இதில், 6 முதல் 12 மாதம் உள்ள 36,715, 1 முதல் 3 வயது வரையுள்ளவர்கள் 89,994 பேருக்கும், 3 முதல் 5 வயது வரை 1,01243 பேருக்கும், 5-6 வயதில் 44,584 பேர் உட்பட, 2. 72 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கில், 100 சதவீதம் அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது, '' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை